சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே உள்ள காலடி பச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மகள் வர்ஷா (8) குடும்பத்துடன் திருப்புவனத்தில் அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிறுநீர் கழிப்பதற்காக சிறுமையை கோவிலுக்கு வெளியே சென்றபோது இரும்பு மின் கம்பத்தை தாண்டிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.