கோவை மாவட்டம் குனியமுத்தூரில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களோடு சேர்ந்து ஒயிலாட்டம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் ஒயிலாட்ட நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிமுக கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.