
சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் ஓட்டுநர் உட்பட 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.