
கோவையிலிருந்து சென்னை பெரம்பூர் வழியாக ராஜஸ்தான் ஜோத்பூருக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து நவம்பர் 21 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு கட்டண ரயில் அடுத்த நான்காவது நாள் அதிகாலை 3.10 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றடையும். மேலும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.