
நீலகிரி மாவட்டத்தில் திமுக மாநில மாணவர் அணி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடவுளை வணங்க வேண்டாம் என்று கூறவில்லை. கடவுள் மீது எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது. நெற்றியில் பொட்டு வைப்பது மற்றும் கைகளில் கயிறு கட்டுவது சங்கிகளின் அடையாளம்.
கரைவேட்டி கட்டி விட்டால் நெற்றி பொட்டை அவிழ்த்து விட்டு வெளியேற வேண்டும். நீங்களும் பொட்டு வைத்து கயிறு கட்டுகிறீர்கள் நீங்களும் சங்கிகள் தான். இப்படி செய்தால் யார் சங்கி யார் திமுக காரன் என்று வித்தியாசம் தெரியாமல் போய்விடும். மேலும் கொள்கை இல்லாமல் போனால் கட்சி அழிந்து விடும் அப்படி அழிந்து கொண்டிருக்க கூடிய கட்சிதான் அதிமுக என்றார்