
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய் கட்சி தொடங்கிய புதிதில் அவருக்கு ஆதரவு கொடுத்த நிலையில் அவருடைய முதல் மாநாட்டினை நடத்தி கொள்கைகளை அறிவித்த பிறகு கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க தொடங்கிவிட்டார். அதோடு நாம் தமிழர் கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவது சீமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியதோடு அவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது கூடுதலாக கோபத்தை ஏற்படுத்தியதால் விஜயை விமர்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் நடிகர் விஜயை விமர்சித்து தன்னுடைய எக்ஸ் பகுதியில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி மற்றும் விஜய் போட்டோவை பகிர்ந்து சங்கியும் சொங்கியும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியிலும் பாஜகவினர் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கியும் சொங்கியும் ! pic.twitter.com/jHT3bLJoeV
— Duraimurugan (@Saattaidurai) November 22, 2024