
5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்..
2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். முதலில் விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா, சுப்மன் கில் அரைசதம் மற்றும் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் சதத்தால், 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.முக்கியமான இந்த போட்டியில், பாகிஸ்தானின் 2 கிரிக்கெட் வீரர்கள் காயமடைந்ததால், அவர்களால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்திய அணி.

இப்போட்டியில் பாகிஸ்தானின் 5 பேட்ஸ்மேன்களுக்கு குல்தீப் பெவிலியன் வழி காட்டினார். குலதீப் யாதவ் 8 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பந்துவீச்சாளரின் இரண்டாவது சிறந்த ஆட்டமாகும்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் சிறந்த ஒருநாள் போட்டிகள் :
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஆடவர் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆவார்.
5/21 – அர்ஷத் அயூப், டாக்கா, 1988
5/25- குல்தீப் யாதவ், கொழும்பு (2023)
5/50 – சச்சின் டெண்டுல்கர், கொச்சி, 2005
4/12 – அனில் கும்ப்ளே, டொராண்டோ, 1996
பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் :
1/37, 2/41, 2/32, 5/25 அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான 4 போட்டிகளில் குல்தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். குல்தீப் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமை 2 முறை பலிகடா ஆக்கியுள்ளார்.
போட்டி முடிந்ததும் குல்தீப் யாதவ் கூறுகையில், இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது கடந்த ஒன்றரை வருடங்களின் தொடர்ச்சியாகும், நான் எனது ரிதத்தை மீட்டெடுத்து எனது பந்துவீச்சை ரசிக்கிறேன். ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது, நல்ல லெங்த்தில் பந்து வீசுவது பற்றி தான் யோசித்து வருகிறேன். ஒருநாள் அல்லது டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.
மேலும் குல்தீப் கூறியதாவது, முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாடும் போது எனது சொந்த திட்டங்களை வைத்துள்ளேன். நான் 2019 இல் அவர்களுக்கு (பாகிஸ்தானுக்கு) எதிராக விளையாடினேன், அவர்களின் பலம் தெரியும், ஆனால் நான் என் வலிமைக்கு ஏற்ப பந்து வீசினேன். நான் விக்கெட்டுக்கு விக்கெட் பந்துவீசுவதில் கவனம் செலுத்துகிறேன், நல்ல அணிகள் ஸ்வீப் அல்லது ஸ்லாக் ஸ்வீப் அல்லது ஸ்வீப் செய்ய முயற்சி செய்து எனக்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை வழங்குகின்றன” என தெரிவித்தார்.
A brilliant spell 👌
Kuldeep Yadav is the first Indian spinner after Sachin Tendulkar to take a five-wicket haul in men's ODIs against Pakistan 👊#AsiaCup2023 | #PAKvIND pic.twitter.com/ie0PJAQzVW
— ICC (@ICC) September 11, 2023