சட்டப்பேரவை கூட்டத் தொடரானது கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில்  இன்று பேசிய அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சிறப்பாக விளையாடி 40க்கு 40 பக்கங்களை வென்று இன்றைக்கு சாம்பியன்ஷிப் பட்டதையும் பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை பரிசளித்த தமிழக மக்களுக்கு என்னுடைய நன்றி.

இதற்க்கு காரணமானவர் நம்முடைய அணியின் தலைவர் மு க ஸ்டாலின் தான். களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி மட்டுமே கண்ட கலைஞர் போல அவருடைய கொள்கைகளை வாரிசாக விளங்கும் மு க ஸ்டாலினும் அனைத்து தேர்தல்களிலும் கழகத்திற்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார் என்று பெருமிதமாக பேசி உள்ளார்.