
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளது.
திமுக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடவுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என சீமான் ஏற்கனவே அறிவித்தார்.
விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் தனித்து போட்டியிடும் சூழல் தான் தற்போது உள்ளது. சட்டசபையில் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.