தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மூன்று ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்புகளுக்கு 2530 இடங்கள் உள்ளது. இவை நடப்பு கல்வியாண்டு இணைய வழி கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மூன்றாம் தேதி தொடங்கி நிறைவடைந்த நிலையில் மொத்தம் 7000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு பருவ தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தால் மாணவர்கள் நலனை கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலமாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.