
தமிழக அரசியலை பரபரப்பாகிய நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் என முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு, ஊழல் தொடர்பான விவரங்களை தெரிவித்தார்.

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை தமிழக பாஜக தொடர்ந்து ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பி வருகிறது. இதனிடையே இன்று #resignstalin என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.
இதனியடையே கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரான பாஜகவின் வானதி சீனிவாசன் அவர்கள் தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு… பாஜக தலைவர் அண்ணாமலையில் வெளியிட்டுள்ள திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்து குறித்து பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து சட்டப்பேரவை விதி 55-இன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டமன்றத்தில் அடுத்த சம்பவம்! @VanathiBJP அக்கா 🔥
இனி கஷ்டம் தான் #resignstalin pic.twitter.com/mUMUvzhpQY— Souwmiya Dhinesh (Modi's family) (@sowmyasarathy) April 21, 2023