விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்மையார் பட்டியை சேர்ந்த ஓட்டக்காரன்(56) என்பது தெரியவந்தது. இவர் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் ஓட்டக்காரன் அப்பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஓட்டக்காரனை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…
Read more“உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு”… இப்படி பண்ணிட்டீங்களே… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… வேறு பெண்ணுடன் திருமணம்… கதறும் காதலி..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக…
Read more