
ஷஹீன் அஃப்ரிடியின் இரண்டாவது திருமண நிகழ்ச்சியில் பாபர் அசாம் கலந்து கொண்ட நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் மகளை திருமணம் செய்துள்ளார். இவர் முன்னதாக அன்ஷாவை பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிலர் மட்டுமே வந்திருந்தனர். ஆனால் இம்முறை அவரது திருமண விழாவில் பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஷஹீன் அப்ரிடியின் திருமண விழாவில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமும் கலந்து கொண்டார். அவர் ஷாஹீன் அப்ரிடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருடன் உரையாடி பாபர் அசாம் மகிழ்ந்தார்.ஆசிய கோப்பை 2023 நடந்து கொண்டிருக்கும் போது ஷஹீன் அப்ரிடியின் திருமண தேதி அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 19ஆம் தேதி திருமணமும், செப்டம்பர் 21ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரியில் திருமணம் ;
ஷாஹீன் அப்ரிடி மற்றும் அன்ஷா இந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த 2வது திருமண விழாவில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த முறை பிரமாண்ட பார்ட்டி கொடுத்துள்ளார். இதில் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டதை காண முடிந்தது.
2023 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் வெளியேற வேண்டியிருந்தது. இலங்கை அணியுடனான தோல்விக்குப் பிறகு, ஷாஹீன் அப்ரிடியும், பாபர் ஆசாமும் டிரஸ்ஸிங் ரூமில் சண்டையில் (வாக்குவாதம்) ஈடுபட்டதாக பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்தது.
ஆனால் தற்போது பாபர் அசாம் ஷாஹீன் அப்ரிடியை இனிமையாக்கியதுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரைப் பற்றியும் நடந்த விவாதங்கள் வெறும் வதந்திகள் என்பதையே இது காட்டுகிறது.
ஷஹீன் அப்ரிடி எதிர்வரும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக ஆடவுள்ளார். இந்த மெகா தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சுக்கு முதுகெலும்பாக ஷாஹீன் அப்ரிடி இருப்பார். அக்டோபர் 14-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
Shaheen Shah Afridi married to Shahid Afridi daughter Ansha Afridi. Wishing the newly couple a happy marriage life. Shaheen Afridi and Babar Azam have seen together 😉#ShaheenAfridi #ShaheenShahAfridi #BabarAzam𓃵 #CWC2023 #BabarAzam #CricketWorldCup2023 pic.twitter.com/4JWOLRelO9
— Get Jetlag (@architpatel3102) September 19, 2023
Because of Rizwan-Babar & Shaheen-Haris Duo, People's never noticed the bond between Babar & Shaheen 🫶🥺#ShaheenShahAfridi #BabarAzam𓃵 pic.twitter.com/TpOBJKVMsl
— Hassan Zahid¹⁰ | 🇦🇪 (@Iam_hassan10) September 20, 2023
This Picture is so Beautiful 💕#ShaheenShahAfridi pic.twitter.com/OulxtJ3Yhu
— TEAM AFRIDI (@TEAM_AFRIDI) September 20, 2023
King Babar Azam attended wedding ceremony of shaheen shah Afridi #ShaheenShahAfridi #anshaafridi #Anshaheen #shahidafridi #ShaheenAfridi #wedding pic.twitter.com/VRi47gNRI7
— Sajid ALi (@sajii_writes) September 20, 2023
Still cannot get over this video. Shaheen Afridi and Babar Azam are just too good. Brothers Ma Shaa Allah ♥️♥️ pic.twitter.com/GjF67AFf1h
— Farid Khan (@_FaridKhan) September 19, 2023
Babar Azam attended Shaheen Afridi's wedding, sharing some delightful moments. pic.twitter.com/Wgkqsi0yQb
— CricTracker (@Cricketracker) September 19, 2023