
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது போனி கபூர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் படத்தின் சண்டைக் காட்சிகள் தொகுத்து வழங்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
#WorldOfThunivu THE MAKiNG 🙌#Thunivu #ThunivuHugeBlockbusterworldwide 💥 #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @ghibranofficial @shabirmusic pic.twitter.com/CAi28izgJw
— Boney Kapoor (@BoneyKapoor) January 28, 2023