சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்க பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆகஸ்ட் 17 இன்று முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நான்கு நாட்கள் வனத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.