
உத்ரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட்டில் 23 வயதுடைய கபில்குமார் என்பவர் வசித்து வருகிறார்n இவர் சாலையில் நடந்து செல்வதை தொடர்ந்து அறைந்து வந்துள்ளார். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கவில்குமாரின் தந்தை உயிரிழந்தார். அதன் பிறகு கபில்குமாரின் தாய் மறுமணம் செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கபில்குமாருக்கு வேலையும் கிடைக்கவில்லை.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்ததால் கபில்குமார் தனது மன உளைச்சலில் இருந்து விடுபட முயன்றார். அவர் சாலையில் நடந்து செல்பவர்கள் தொடர்ந்து அறைந்து வந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது பிறரை அறைந்தால் தனக்கு மகிழ்ச்சி கிடைத்ததாக போலீஸிடம் கபில்குமார் கூறியுள்ளார்.