சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி பங்கேற்பதற்கு பிசிசிஉடற்தகுதி சான்று கொடுத்துள்ளது. இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவியா மாறன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் நிதிஷ்குமார் ரெட்டி சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து சிறப்பாக ஆடினார். அதனை தொடர்ந்து அவருக்கு தற்போதைய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

அதன் பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்த இவர் காயத்திலிருந்து மீண்டு வர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் இருந்தது. அவர் மிகவும் முக்கியமான வீரர் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நினைத்திருந்தது. இதற்கிடையே அவர் காயத்தில் சிக்கியிருந்தார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் சன்ரைசரர்ஸ் அணி மகிழ்ச்சியில் உள்ளது.