சபரிமலை ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். பக்தர்கள் கட்டும் இருமுடியில் ஒரு பையில் நெய் தேங்காய் அதனுடன் அரிசி முக்கிய பொருளாக இருக்கும். மற்றொரு பையில் பூஜைக்கு தேவையான பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், கற்கண்டு போன்றவை இருக்கும். இவ்வாறு இரண்டு பகுதிகளையும் இருமுடியாக கட்டி பக்தர்கள் சபரிமலைக்கு எடுத்துச் செல்வர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எடுத்து வரும் இருமுடி கட்டில் பன்னீர், சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பெரும் பகுதி எரிக்கப்படுவதை தவிர்க்க தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.