மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மயங்கி விழுந்தார்.

அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனே அருகிலிருந்த தலைவர்கள் அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதிகமான வெப்பத்தினால் மற்றும் பரபரப்பான நிகழ்வுகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பிகக் கூறப்படுகிறது.

“>

 

இதுகுறித்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம், சமூக ஊடக தளமான X-இல், “எனது தந்தை நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். 79 வயதான சிதம்பரம், அதற்கு முன்னதாக சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் நடந்த காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.