
பீகார் மாநிலத்தில் மாநில அரசிற்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பொதுமக்களுள் சிலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களைகலைப்பதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த உதவி கலெக்டர் ஸ்ரீகாந்த் என்பவரை காவலர் ஒருவர் அடையாளம் தெரியாமல் லத்தியால் தாக்கினார். அதனை தடுத்த அருகில் இருந்த காவலர்கள் அவர் உதவி கலெக்டர் என்று தெரியப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் அந்த இடத்தில் இருந்து விலகி சென்றார். மேலும் இந்த சம்பவத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
SDM पर भी लाठीचार्ज ! pic.twitter.com/Ag25sd0WDt
— News18 Bihar (@News18Bihar) August 21, 2024
“>