அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை நந்திதா. அதனைத் தொடர்ந்து எதிர் நீச்சல் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் நந்திதா அளித்த பேட்டியில், தான் சில வருடங்களாக fibromyalgiaஎன்ற நோயால் பாதிக்கப்பட்ட இருப்பதாகவும் இந்த நோயால் உடல் எடையில் அதிக மாறுபாடு வந்தது என்றும் சின்ன வேலை செய்தால் உடலில் அதிக வலி இருக்கும், சில நாட்களில் உடலை அசைப்பதே மிகவும் கஷ்டமாக இருக்கும் என்ற நிலை வந்தது என கூறினார். நடிகை சமந்தா போலவே தற்போது நந்திதாவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.