
கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத் தொகையை வெகுவாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரதீப் ஒரு படத்தில் நடிப்பதற்கு 18 கோடி ரூபாய் கேட்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார். இதனால் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இவர் சம்பளம் கேட்பதாக திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.