
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் வருகிற 2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வருகிற 5-ம் தேதி விஜய் நடித்துள்ள தி கோட் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் கோவையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தற்போது அடித்த போஸ்டர் இணையத்தில் மிகவும் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
அதாவது அந்த போஸ்டரில் 234 தொகுதிகளிலும் வெறித்தனமான வெற்றி என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இந்த போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தலைமை செயலகத்தின் படமும் இடம்பெற்றுள்ளது. அதோடு தளபதி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஏற்கனவே கோவையில் அதிமுக மற்றும் திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டிவரும் நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தினரும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.