தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பலரும் வீட்டில் ஏசி வாங்கலாமா அல்லது ஏர்கூலர் வாங்கலாமா என்று யோசிப்பீர்கள். ஏனெனில் ஏசியை விட ஏர் கூலர் விலை குறைவு மற்றும் பராமரிப்பு செலவும் குறைவு. இந்நிலையில் ஏசி மற்றும் ஏர் கூலர் இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து தற்போது ஒரு சிறிய தொகுப்பை பார்க்கலாம்.‌ அதன்படி ஏர்கூலர் ஒரு எளிமையான தொழில்நுட்பத்தில் வேலை செய்வதுடன் வெளிக்காற்றை  உள்ளிழுத்து வீட்டை குளிர்விக்கிறது. ஆனால் ஏசியைப் பொறுத்தவரை வீட்டை வெப்பமயமாதிலிருந்து தடுத்து அறையை குளிர்விக்க மட்டும்தான் செய்யும். ஆனால் வெளிக்காற்றை உள்ளிழுக்காது.

ஏசியை சுவரில் மாட்டுவது போன்று சுவரில் பொருத்திக் கொள்ளும் ஏர் கூலரும் ரிமோட் வசதியுடன் சந்தைகளில் கிடைக்கிறது. இருப்பினும் பட்ஜெட் விலையில் ஏர்கூலர் வாங்கும் போது அதற்கென வீட்டில் தனி இடத்தை ஒதுக்க வேண்டும். அதன் பிறகு ஏர்கூலருடன் ஒப்பிடும் போது ஏசியின் மின்கட்டணம் அதிகமாக வரும். அதோடு ஏர் கூலர் புதிய காற்றை உள்ளிழுத்து குளிர்விப்பதால் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அது நல்லது. அதே சமயத்தில் ஏர் கூலரை கையாள்வதும் மிக எளியது.

இதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். அதோடு பராமரிப்பு செலவும் ஏசியுடன் ஒப்பிடும்போது குறைவுதான். அதேநேரம் ஏர் கூலரில் அடிக்கடி தண்ணீர் ஊற்றுவதால் அதை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. இல்லையெனில் அதில் கிருமிகள் உற்பத்தியாகி ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் நிலை உருவாகும். காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களிலும் ஏர்கூலரின் செயல்பாடு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதன்பிறகு  ஏசியில் இரு சாதனங்கள் பொருத்தப்படும் நிலையில் வெளியில் உள்ள பெட்டியில் குளிர் பதன அமிலம் இருக்கும்.

இதில் பெரும்பாலும் ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன் மற்றும் ஹைட்ரோ ப்ளோரோ கார்பன் தான் குளிர்வதன அமிலமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலம் ஏசியை இயக்கியவுடன் கம்ப்ரஸர் மூலம் உள்ளே செலுத்தப்படும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கானது. அதேசமயம்  ஏசி எல்லாவிதமான ஊர்களுக்கும் அனைத்து விதமான ஈரப்பதத்திற்கும் ஏற்றது. இது ஏர் கூலருடன் ஒப்பிடும்போது தனித்து நின்று இயங்கும் ஆற்றல் கொண்டது. இதில் தண்ணீர் நிரப்ப வேண்டிய அவசியம் கிடையாது. அதோடு சுவரில் மாட்டிக்கொள்வதால் பெருமளவு இடத்தையும் பிடிக்காது. மேலும் ஏசி மற்றும் ஏர் கூலர் என உங்கள் தேவைக்கேற்ப எந்த சாதனத்தையும் நீங்கள் யோசித்து வாங்கி  பயன்பெறலாம்.