
நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் செயல்படுத்து வரும் நிலையில் இதன் மூலமாக தினசரி 1.5 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கிறது. இந்த நிலையில் இது சீசன் மாதம் என்பதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமான மதுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் தண்ணீர் உள்ளிட்டவற்றை மதுவில் கலந்து விற்பனை செய்வதாக கடந்த சில நாட்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் இதில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது. இதனை அடுத்து நான்கு டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் 9 டாஸ்மாக் ஊழியர்கள் என மொத்தம் 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.