சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள அடையார் ஆற்றங் கரையில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்த நிலையில் இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பார்த்ததில் அந்த வாலிபரின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஏழு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. கொடூரமாக கொலை செய்து அடையார் ஆற்றில் வீசி இருப்பது தெரிய வந்தது.  இதனை அடுத்து போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் கண்ணகி நகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சேர்ந்த ஆகாஷ் என்பதும், வயது 27 என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர் பிரபல ரவுடியாக இருந்துள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் முன்விரோதம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ரௌடி கொலை செய்த அவருடைய நண்பர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரக்கு வாங்கி கொடுத்து நண்பனே கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது விசாரணையில் அம்பலமாக இருக்கிறது.