
நாளொன்றுக்கு சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழக முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரி மின்சாரம் தமிழகத்தில் நகர்புற பகுதிகளில் 24 மணி நேரமும் கிராமப்புறங்களில் 23.5 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் தற்போது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.