தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் மண் இன்று சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. நிலவின் லேண்டெர் மற்றும் ரோவர் ஆகியவை சரியாக தரையிறங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய நிலவில் உள்ள மண் தேவைப்பட்டது. முந்தைய திட்டங்களின் போது அந்த மண் அமெரிக்காவின் ஆசாவிடமிருந்து ஒரு கிலோ 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்நிலையில் இந்தியாவில் அந்த மண் வகை உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்தனர்.

அதன்படி நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி குன்னமலை பகுதியில் இஸ்ரோ 2012 ஆம் ஆண்டில் முதல் முறையாக 50 டன் மண்ணை சேகரித்தது. 2019 ஆம் ஆண்டில் சந்திரயான் 2 திட்டத்திற்கு அதே மண்ணை கொண்டு சோதனை செய்த நிலையில் தற்போது அந்த மண் மீண்டும் சந்திரயான் 3 திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.