நியூசிலாந்தின் பூர்வ குடிகளான மாவோரி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக சட்ட திருத்த மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாவோரி சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களின் பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி நடனம் ஆடியது சர்ச்சை ஏற்படுத்தியது.

மாவோரி சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 வயது இளம் எம்பி அவரது முதல் உரையில் உலக மக்களின் கவனத்தை பெற்றிருந்தார். அதேபோன்று இம்முறையும் மசோதாவைக் கிளி தெரிந்து, தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.