சர்வதேச செஸ் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக 3 இந்திய வீரர்கள் முதல் 10 இடத்தில் இருக்கிறார்கள். அதன்படி இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 4-ம் இடத்தில் இருக்கிறார். இதேபோன்று தமிழக வீரர்களான குகேஷ் 7-ம் இடத்திலும், பிரக்ஞானந்தா 8-ம் இடத்திலும் இருக்கிறார்கள்.

இதில் பிரக்ஞானந்தா தன்னுடைய மதிப்பீட்டை 10 புள்ளிகள் அதிகரித்து உலகின் 10 இடங்களுக்குள் முதல்முறையாக நுழைந்துள்ளார். மேலும் முதல் 11 இடங்களில் 4 இந்திய வீரர்களும், 22 இடங்களில் 5 இந்திய வீரர்களும், 29 இடங்களில் 6 இந்திய வீரர்களும், 37 இடங்களில் 7 இந்திய வீரர்களும், 46 இடங்களில் 8 இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.