
அரசியலில் இயங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். முழுநேர அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன்” என்று நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அரசியல் குறித்து பேசியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் அரசியல் வருகை குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது இதுவே முதல்முறை.