தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள.‌ஏற்கனவே இன்று சனிக்கிழமை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை.‌

இந்நிலையில் இன்று காலை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் தற்போது அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் என்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.