
பண மோசடி வழக்கில் youtuber சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூரை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவரிடம் தனது youtube இல் விளம்பரம் செய்வதாக கூறி சவுக்கு சங்கர் ஏழு லட்சம் பணம் மோசடி செய்துள்ளார். சொன்னபடி விளம்பரம் செய்யாதது மட்டுமல்லாமல் பணத்தை திருப்பி கேட்ட போதும் அதனை தர மறுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான புகாரியில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.