தமிழகத்தில் தற்போது 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒரே நேரத்தில் இரு வளிமண்டல  சுழற்சிகள் நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அதன் பிறகு இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, மதுரை மற்றும் திண்டுக்கல் மற்றும் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.