
தமிழ்நாடு பாஜகவில் அதிரடி மாற்றமாக புதிய தலைவர் – செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக ஜெகதீசன், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவராக சரவண துரை, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக மங்களம் என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாகேந்திரன் (இராமநாதபுரம்), சுரேஷ்குமார் (விருதுநகர் மேற்கு), செல்வம் அழகப்பன் (புதுக்கோட்டை கிழக்கு) ஆகியோர் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
