
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு ஜூன் 14ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. பார்க்கிங் கட்டணம் 6 மணி நேரத்திற்கு ரூ.20 ஆகவும், 12 மணி நேரத்திற்கு ரூ.30 ஆகவும், அதற்கு மேல் ரூ. 40ஆகவும் உயர்த்தப்படுகிறது. அதேசமயம், மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கு முந்தைய கட்டணமே தொடரும் என்று மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.