தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை பெண்ணுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு சிம்புவின் மேலாளர் விளக்கமளித்துள்ளார். சிம்புவுக்கு இலங்கைத் தமிழ் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக வரும் செய்தியை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். அதில் எந்த உண்மையும் இல்லை. திருமணத்தைப் பற்றிய நல்ல செய்திகள் வந்தால், அதை முதலில் ஊடக நண்பர்களுக்குத்தான் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.