வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனம் மாறாமல் இருப்பதற்காக வோடாபோன் ஐடியா (vi) நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே பல விதமான சலுகை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், அந்த சலுகையை தானியங்கி குரல் மூலம் நினைவுபடுத்தி வருகிறது.

அதன்படி ரூ.239- ரூ.3,199 வரையிலான திட்டங்களை ரீசார்ஜ் செய்திருந்தால், 130 GB  டேட்டா இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாத கடைசியிலும் தலா 10 GB  டேட்டா வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.