சாலை விதிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்த வகையில் அதிக சத்தம் மற்றும் புகை எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை ‌ வாகனங்களில் பயன்படுத்துவது போக்குவரத்து விதி மீறலாகும். ஆனால் சமீப காலமாக இளைஞர்கள் பலர் தங்கள் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை பொருத்தி வருகிறார்கள். இதன் காரணமாக ஒலி மற்றும் காற்று மாசு என்பது அதிகரித்து வருவதால் தற்போது போலீசார் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.

இது தொடர்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் காவல்துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதோடு அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 181 பைக் சைலன்ஸர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை வரிசையாக அடுக்கி வைத்து பில்டோசர் மூலமாக போலீசார் அழித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.