தமிழக சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு கோரியும் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

இதற்காக சென்னையில் வள்ளுவர் கோட்டம் உட்பட 4 இடங்களில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு வாகனங்களை கொண்டுவரக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னை எழும்பூரில் போராட்டம் நடைபெற இருக்கிறது.