திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அரசு பேருந்தில் சாக்கு முட்டையுடன் ஒரு முதியவர் ஏறினார். அந்த முதியவரை பார்த்ததும் நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு தாக்கி கீழே தள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.