மதுரை மாவட்டம் அவனியாபுரம் புறவழிச்சாலையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது சடலமாக மீட்கப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி(70). அவரது கணவர் நடராஜன் ஆவின் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சந்திர சேகர்(50) அமர்நாத்(30) ஆகியோர் இந்திராணியிடம் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் சந்திரசேகரையும், அமர்நாத்தையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.