கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்த தூய்மை பணியாளர்களை கிராம மக்கள் வித்தியாசமாக கௌரவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேலகொடுமலூர் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தூய்மை பணியாளர்கள் கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை பார்த்துள்ளனர். அவர்களை கௌரவிக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தை தூய்மை பணியாளர்களை வைத்து திறக்க கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறக்க வைத்தனர். இந்த கொண்டாட்டம் கிராம மக்களிடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.