மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி பகுதியில் ‌ கேப்டன் பிரபாகரன்-அன்னக்கிளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது சாதம் வடித்த கொதி நீரை அன்னக்கிளி வீட்டில் கீழே வைத்துள்ளார். அப்போது அவர்களுடைய 3 வயது மகன் நிவினேஷ் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்த சிறுவன் எதிர்பாராத விதமாக அந்த கொதி நீரில் விழுந்து விட்டான். இதில் உடல் வெந்த நிலையில் சிறுவன் அலறி துடிக்க ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்ற நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த சிறுவனுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டான். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.