
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களுடைய திறமைகளை சமூக வலைதளத்தில் வெளியிடுவதன் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிறார்கள். அந்த வகையில் லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற 2 வயது சிறுவனுக்கு சிறு வயது முதலே அபாரமாக ஓவியம் வரையும் திறமை இருந்துள்ளது. இதை கவனித்த அவருடைய பெற்றோர் சிறுவனுக்கு ஓவியம் வரைவதற்காகவே தனி ஸ்டூடியோவை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். அந்த சிறுவன் குதிரைகள் மற்றும் டைனோசர்ஸ்கள் போன்ற பல வகையான ஓவியங்களை அற்புதமாக வரைந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய மகனின் அற்புதமான ஓவியத்திறமையை கண்டவியந்த அவருடைய தாயார் லிசா இன்ஸ்டாகிராமில் தனி பக்கத்தை உருவாக்கி தன் மகனின் ஓவியங்களை பதிவேற்றம் செய்து வந்தார். இதைத்தொடர்ந்து சிறுவன் வரைந்த ஓவியங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் பகுதியில் நடந்த ஒரு கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டது. இதில் அந்த சிறுவன் வரைந்த ஒரு ஓவியம் சுமார் 7000 டாலருக்கு விற்பனையானது. அதன்படி இந்திய மதிப்பில் 5.82 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram