
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முகமது ஷமி. இவர் தற்போது காயம் காரணமாக போட்டிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் இந்தியாவின் மிக பிரபலமான டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவை முகமது ஷமி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இருவரின் புகைப்படங்களையும் இணைத்து திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக இணையதளத்தில் தகவல் தீயாக பரவியது. ஆனால் பின்பு அது போலியானது என்று கண்டறியப்பட்டது. ஏற்கனவே சானியா மிர்சாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்குடன் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு முகமது ஷமி மற்றும் சானியா மிர்சா இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் பரவிய நிலையில் இருவர் தரப்பில் இருந்தும் அதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது முகமது ஷமி திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் இது போன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை பரப்பாதீர்கள். நான் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக மீம்ஸ் போட்டு மகிழ்ந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி யாரோ ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும் என்று அவர்கள் யோசிக்கவில்லை. தேவையில்லாத பொய்யான விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் முகமது ஷமிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.