
சென்னை அம்பத்தூரில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு குற்ற பிரிவு உதவி காவல் ஆய்வாளராக சரவணன் (51) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
அதன் பின் அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.