தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஊர் கொண்டா பகுதியில் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தன்னுடைய உறவினருடன் சென்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது அந்தப் பெண் தன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நிலையில் இரவு கோவில் வளாகத்தில் படுத்து தூங்கினர். சுமார் 11 மணி அளவில் அந்த பெண் கோவில் பின்புறமாக இயற்கை உபாதை கழிக்க சென்ற போது அந்த அந்த கோவிலின் ஊழியர் ஒருவர் சிலரை போன் போட்டு வரவழைத்தார்.

அந்த இடத்திற்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு இதனை தடுக்க வந்த உறவினர் ஒருவரையும் தாக்கி அவரிடம் இருந்த 7000 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டனர். இதில் கார்த்திக் என்பவர் அந்த பெண் குடிக்க தண்ணீர் கேட்டபோது கோபத்தில் அந்த பெண்ணின் வாயில் சிறுநீர் கழித்துள்ளார். அதன்பிறகு மகேஷ் கவுத் என்பவர் தான் அந்த பெண்ணின் உறவினரை தாக்கி பணம் பறித்துள்ளார். தற்போது அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளிகளான ஆஞ்சநேயலு (25), சதிக் பாபா (28), வாசுல்தாஸ் மணி (21), கார்த்திக் (20), மகேஷ் கவுத் (28), ஹரிஷ் கவுத் (23), மத்த ஆஞ்சநேயலு (24) உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.