தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல பாடகிகளில் ஒருவர்தான் வைக்கம் விஜயலட்சுமி. இவர் குக்கூ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். காக்கா முட்டை, பிறவி, என் ஜீவன், வாயாடி பெத்த பிள்ளை என பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்த “அங்குவான கோனிலோ” என்ற பாடலையும் இவர்தான் பாடியிருந்தார். இப்படி தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி பின்னணி பாடகியாக கொடிகட்டி பறந்து வரும் இவருடைய வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு துயரம் நடந்துள்ளது.

அதாவது சமீபத்தில் இவர் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். இதில், “நான் விவகாரத்து செய்ததற்கு காரணம் மியூஸிக்கில் அது பண்ண கூடாது இது பண்ணக்கூடாது என்று என்னுடைய கணவர் என்னை ரொம்பவே டிஸ்கரேஜ் செய்தார். என் அப்பா அம்மாவை அவாய்ட் பண்ண சொன்னாரு. நான் மியூசிக்ல கொஞ்சம் ஃபேமஸானது அவருக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் ஈகோ இருந்தது. சாமி ரூம் போனா கூட அவருக்கு பிடிக்காது. அதனால் சரிப்பட்டு வராதுன்னு நினைச்சி விவகாரத்து செஞ்சிட்டேன்” என்று கூறியுள்ளார்.