சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற நிலையில் இந்திய ரசிகர்கள் பலரும் அதனை உற்சாகமாகக் கொண்டாடினர். நாடு முழுவதும் இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது சில இடங்களில் இந்த வெற்றி கொண்டாட்டம் கலவரமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜாமா மஸ்ஜித் பகுதியில் நேற்று இரவு இந்திய அணியின் வெற்றியை பட்டாசுகள் வெடித்து கொண்டாடியபோது திடீரென இரு குழுக்களுக்கு இடையே மோதல் போக்கு என்பது ஏற்பட்டது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறிய நிலையில் இறுதியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதோடு அங்கிருந்த கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதோடு தீ வைத்தும் கொளுத்தினர்.

இதில் பலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலவரத்தை கட்டுப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதே போன்று ஹைதராபாத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிய போது திடீரென அங்கு எதிர்பாராத விதமாக பெரும் கூட்டம் கூடியது. இதனால் கூட்டத்தை சமாளிப்பதற்காக உடனடியாக போலீசார் லத்தியடி நடத்தி அங்கிருந்து அவர்களை கலைத்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் அமித் மால்வியா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடுவதற்கு கூட உரிமை கிடையாதாஎன்று அவர் தன் எக்ஸ் பக்கத்தில் கடுமையான கேள்விகளை முன் வைத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.